உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர்.
இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். தற்போது, அங்கு ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் மாணவர்களை இந்தியா அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக, தமிழக முதலமைச்சர், தமிழக மாணவர்களை அழைத்து வருவதற்கான முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என அறிவித்ததோடு, மாணவர்களை அழைத்து வரும் பணியினை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற பரமக்குடி நகராட்சி பகுதியை சார்ந்த கண்ணன், அம்பிகாபதி ஆகியோரின் மகன் சந்தோஷ் கண்ணன் என்பவர் உக்ரைன் நாட்டிலிருந்து இன்று இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார்.
அவரை தமிழக அரசு சார்பில் சென்னை – தூத்துக்குடி வான் வழியாக அழைத்துவரப்பட்டு, தரைவழியாக இராமநாதபுரத்திற்கு வழியனுப்பிவைக்க உரிய நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர், மருத்துவ மாணவன் சந்தோஷ் கண்ணனை, சென்னை விமான நிலையத்தில் வரவேற்றதோடு தூத்துக்குடிக்கு வழியனுப்பி வைத்தார்கள். சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்ட மாணவனை, தூத்துக்குடி விமான நிலையத்தில், சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றார்கள்.
இதுகுறித்து மாணவன் சந்தோஷ் கண்ணன் தெரிவித்த்தாவது- நான், உக்ரைன் நாட்டில் ருபிசினி, லுகான்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். தற்போது, அங்கு ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர், தமிழக மாணவர்களை அரசின் சொந்த செலவில் அழைத்து வருவது மிகவும் பெருமைக்குறியது. மேலும், என் போன்ற மாணவ, மாணவியர்கள் போர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, தமிழக அரசு இது போன்ற உதவிகளை வழங்கி எங்களை, எங்களது சொந்த ஊருக்கு அழைத்து வந்தற்கு என் சார்பாகவும், எனது குடும்பத்தினர் சார்பாகவும் மாணவ, மாணவியர்கள் சார்பாகவும் தமிழக முதலமைச்சர் அவாகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.