தென் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


தென்தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூரில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், 

புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கோவை சின்கோனாவில் 3, அரிமளம், சின்னக்கல்லாறு, சிவகாசி, வால்பாறையில் தலா 2 செ.மீ. மழை பதிவானது.

Previous Post Next Post