தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி - எட்டையபுரம் சாலை முத்தம்மாள் காலனி பகுதியில், நெடுஞ்சாலைத் துறையின் மெக்கானிக்கல் புருமர் வாகனத்தின் வாயிலாக, சாலைகளில் படிந்துள்ள மணல்களை அகற்றும் பணியினை இன்று (02.03.2022) தொடங்கி வைத்தார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை பொட்டல்காடு பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து, இன்று (02.03.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்