இந்தியாவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு பெருநிறுவனங்களுள் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் ஒரு பிராந்திய தொலைக்காட்சி அலைவரிசையான நியூஸ் 18 – ன் தமிழ்நாட்டின் மருத்துவ விருதுகள் 2022 நிகழ்வில், தென் இந்தியாவில் மிகச்சிறந்த மருத்துவமனையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நலவாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத் துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. மா. சுப்ரமணியம் அவர்களிடமிருந்து, கௌரவம்மிக்க இவ்விருதை மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். B. கண்ணன் பெற்றுக்கொண்டார். சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் முன்னோடித்துவ பங்கு, அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்களின் குழுவை பேணி வளர்ப்பது மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சையில் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவற்றில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சிறப்பான முயற்சிகள் மற்றும் முனைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த அங்கீகாரம் அதற்கு கிடைத்திருக்கிறது.
உயர் மருத்துவ சேவை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளைக் கொண்டு உலகெங்கிலுமிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் தேடி வரும் அமைவிடமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதில் மருத்துவமனைகளின் பங்களிப்புகளை அங்கீகரித்து, பாராட்டுவதற்காக மருத்துவ விருதுகள் 2022 என்ற இந்த சீர்முயற்சி நியூஸ் 18 அலைவரிசையால் தொடங்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு வகையினங்களின் கீழ் வழங்கப்படும் இவ்விருதுகள், பல்வேறு உறுதியான அம்சங்களின் அடிப்படையிலான தேர்வு செயல்முறையை சார்ந்திருக்கின்றன.