கோவில்பட்டி - துலுக்கப்பட்டி இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி - ரயில்கள் ரத்து, போக்குவரத்தில் மாற்றம் விபரம்.!

கோவில்பட்டி - துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-

1. மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து  புறப்படும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) விருதுநகர் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதுரை - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2. மறுமார்க்கத்தில்  மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோயில் - விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் மார்ச் 31 ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

3. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16321) நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

4. மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் (16322) மதுரை - நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். 

5. மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூரிலிருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் - சென்னை எழும்பூர்  எக்ஸ்பிரஸ் (16128) திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஏப்ரல் 1 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் (16128)  அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post