தூத்துக்குடி மாவட்டத்தில் 0-6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய விவரங்களை பதிவு செய்ய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் Swastha Balak Balika Spardha("Healthy Child") என்ற நிகழ்வு இந்தியா முழுவதும் 21.03.2022 முதல் 27.03.2022 வரை செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 0-6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய விவரங்களை அங்கன்வாடி பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், இந்திய மருத்துவ சங்கம் (Indians Medical Association),
குழந்தை மருத்துவ சங்கம்(Paediatric Association), குடியிருப்போர் நலச்சங்கம், பள்ளி ஆசிரியர்கள், இளைஞர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்களை கொண்டு அளவிட்டு போஷன் ட்ராக்கர் (Poshan Tracker) என்ற கைபேசி செயலியில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குழந்தைகளின் பிறந்த தேதி, எடை மற்றும் உயரம் ஆகியவற்றினை போஷன் ட்ராக்கர் (Poshan Tracker) என்ற கைபேசி செயலியில் பதிவிடுவதன் வாயிலாக குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ள மைக்கான சான்றினை Swastha Balak Balika Spardha("Healthy Child") என்ற நிகழ்வின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் 0-6 வயது குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளின் எடை மற்றும் உயரம் ஆகிய விவரங்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் அளவிட்டு போஷன் ட்ராக்கர் (Poshan Tracker) என்ற கைபேசி செயலியில் பதிவுகள் மேற்கொண்டு தங்களது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளமைக்கான சான்றினை Swastha Balak Balika Spardha ("Healthy Child") என்ற நிகழ்வின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும்,
ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளாக இருப்பின் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் வாயிலாக பயனடைந்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தினை உருவாக்கிட போதுமான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.