நேற்று காலை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுபெறக்கூடும். வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி (ASANI) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
#CycloneAsani புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் தீவுவாசிகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க வசதியாக மூடப்பட்ட ரன்வே திறக்கப்பட்டுள்ளது. 22 மார்ச் 1615 மணி வரை மற்றும் 23 மார்ச் 1300 மணி வரை விமானங்களுக்கு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.