தெருவிளக்கு அமைக்கக்கோரி சூலூர் பேரூராட்சித் தலைவரிடம் மனு


மார்ச் 13

கோவை சூலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இராவத்தூர் பகுதியில் இருந்து சூலூர் குளத்திற்கு செல்லும் கண்மாய் பாலம் முதல் நொய்யல் ஆற்றுப்பாலம் வரை தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வேலைக்குச் சென்று வீடு திரும்பும்  மகளிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாவதோடு, அந்தப் பகுதியில் சமீபகாலமாக அதிகமாக அடையாளம் காணமுடியாத நபர்களால் வழிப்பறியும், குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது 

எனவே இந்தப் பகுதிக்கு தாங்கள் தனிக்கவனம் செலுத்தி தெருவிளக்குப் போட்டுத்தருவதோடு மட்டும் நில்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி எங்கள் அச்சத்தைப் போக்கி, 

நிம்மதியான சூழலை உருவாக்கித் தருமாறு, சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவனிடம் மனுக்கொடுத்ததோடு நில்லாமல், ஒரு முறை சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்தால் எங்களுக்கும் ஒரு பலமாக இருக்கும் என்றனர் ஊர்ப்பொதுமக்கள் 

மக்கள் கோரிக்கையையும், மனுவையும் மனதார வாங்கிக் கொண்ட சூலூர் பேரூராட்சித் தலைவர், நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமன்றி உங்கள் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை வார்த்தையில் வியந்து போயினர் பொதுமக்கள் அவருடன் திமு கழகத்தின் சூலூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் தமன்னவன் மற்றும் திமுகவின் சூலூர் தகவல் தொழில் நுட்பப்பிரிவு ராஜ்குமார் ஜெயசிங்கும் உடன் இருந்தனர்

Previous Post Next Post