தூத்துக்குடி : மார்க்கெட், ஜெயராஜ் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.! - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.! வியாபாரிகள் சாலை மறியல்.!


தூத்துக்குடியில் மார்க்கெட் மற்றும் ஜெயராஜ் ரோடு பகுதியில் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.  


தூத்துக்குடி காய்கனி மார்க்கெட், மற்றும் ஜெயராஜ் ரோடு பகுதியில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மார்க்கெட் வழியாக வருவதாலும், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் நிறுத்தும் வாகனங்களாலும் அடிக்கடி கடும் போக்குவரத்து 


நெருக்கடி ஏற்படுகிறது .இதனால் இப்பகுதியில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு பொது மக்கள் தொடர் புகார்கள் அனுப்பினர்.

இதையடுத்து மாநகரமைப்பு அலுவலர் ரங்கநாதன் தலைமையில் உதவி அலுவலர்கள் ராமசந்திரன், ஆறுமுகம் நாகராஜன், காந்திமதி உதவி ஆணையர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை 100க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.


சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் தொடர்ந்து நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரியிடம் பேசி சாலை மறியலை கைவிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினார்  இதையொட்டி மத்திய பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், வேல்முருகன், இசக்கியப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபட்டனர்.

Previous Post Next Post