"அரைவேக்காடுகளுக்கு புரியாது" - அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமான பதிலடி.!

மின்சாரத்துறையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஆதாரமற்ற  குற்றம்சாட்டு கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரைவேக்காடு என காட்டமாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரத் துறையின் ரூ.4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் ஊழியர் போல் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதனை 24 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என கெடு விதித்திருந்தார்.

இந்த கெடுவுக்கு பதிலளிக்காத அண்ணாமலை, எனக்கு கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா? என கேட்டதுடன், நாமக்கல் இருளப்பாளையத்தில் நிறுவனம் ஒன்று மின்வாரியத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக சம்பந்தமில்லாமல் பதிலளித்ததுடன், இதற்காக காவல்துறையை விட்டு தன்மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

https://twitter.com/V_Senthilbalaji/status/1504672414872965123?t=NnGkZBynWRHm11qe3ZAIHQ&s=19

இந்நிலையில், இந்த  குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  "BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. 

வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை. என காட்டமாக பதில் அளித்துள்ளார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post