தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க பேரவை பொதுக்கூட்டம்: மத வன்முறை தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக்கோரி தீர்மானம்.!

தூத்துக்குடியில் நடந்த சமூக நல்லிணக்க பேரவை பொதுக்கூட்டத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத வன்முறை தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தூத்துக்குடி சின்ன கோயில் வளாகத்தில் சமூக நல்லிணக்க பேரவை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாஸ்டர் ஜெயராஜ் வரவேற்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் இக்பால் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன், பெந்தகோஸ்து சபை பேராயர் ஸ்டீபன், வழக்கறிஞர் சமூக ஆர்வலர் விஜி, சைவநெறி வீரபத்திரன், அய்யாவழி கிருஷ்ணவேணி கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கனகராஜ், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 

இக்கூட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் பெண்ணை இழிவுபடுத்திய தீட்சர்களை கண்டித்தும், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு விதித்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை குறிவைத்து முடக்கிப் போட முயல்கின்ற சம்பவங்களை கண்டித்தும் மத வன்முறை தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

'எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் குலம்' எனும் சித்தாந்தம் கூறும் நாட்டில், சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம் பலத்தில் தேவாரம் பாடச் சென்ற தலித் சமுகப் பெண்ணை தேவாரம் பாடவிடாமல் அப்பெண்ணை இழிவுபடுத்தி வெளியேற்றிய கொடுமையைச் செய்த தீட்சதர்களை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தஞ்சை மாவட்டம் மிக்கேல்பட்டியில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளை கல்வி அறிவுபெற்றவர்களாக ஆக்கித்தர 1857-ஆம் பெண் ஆண்டு அருள்சகோதரிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது பெண்கள் பள்ளி எனும் பெருமை பெற்ற திரு இருதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 'லாவண்யா' எனும் பெண் பிள்ளையை 'மதமாற்றம்' எனும் பெயரில் தற்கொலைக்குத் தூண்டினார் என்று பொய்க் குற்றச்சாட்டின் பேரில் 'அருள்சகோதரி சகாயமேரி' அவர்களை முறையாக புலன் விசாரணை இன்றி சிறையிலடைத்த சம்பவம் என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களை குறிவைத்து முடக்கிப் போட முயல்கிற செயல் என்றே இக்கூட்டம் கருதுகிறது. பொய்யுரைகளுக்கு கண்டிக்கிறது. துணைபோனவர்களை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது

ஹிஜாப் எனும் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையை இசுலாமிய மாணவிகள் கல்லூரிக்கு அணித்து வரக்கூடாது என கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்ததின் மூலம் இசுலாமிய பெண்கள் கல்வி பெறுவதை தடுத்திட வேண்டும் என்ற பிற்போக்கு தனத்தைக் காட்டுவதாக இக்கூட்டம் கருதுகிறது. யார் என்ன உடை அணிந்தாலும் கல்வி கற்பதற்கு இடையூறு இல்லை என்பதால் ஹிஜாப் அணிந்து வர கர்னாடக அரசு விதித்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இந்திய மண்ணின் இறையாண்மையைக் காப்பதற்கு அரசியல் சாசனம் அத்துனை உரிமைகளும், அனைத்து  சமயத்தவர்க்கும், அனைத்து சமூக, சமுதாய ஏற்றத்தாழ்வின்றி வாய்ப்பதற்குத் தடையாக அரசியல் சாசனம் மக்களுக்கும் குறைவின்றி, இருக்கின்ற, சாதி, மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆகாயம் பெறத் துடிக்கின்ற பிளவு வாதச் சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணித்து, ஒரு தாய் மக்களாய் சகோதர உணர்வு கொண்டு, மத நல்லிணக்கமும், மாந்தநேய மாண்பும் கொண்ட சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பிட ஒருங்கிணைந்து செயல்பட, ஓரணியில் இந்தச் சமூக  நல்லிணக்கப் பேரவை அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது. 

தமிழக அரசே இந்திய ஒன்றியத்திற்கு முன்னுதாரணமாக மதவன்முறை தடுப்புச் சட்டத்தினை தமிழகத்தில் நிறை வேற்ற வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சமூக ஆர்வலர் பாத்திமா பாபு, தென்னிந்திய திருச்சபை பாஸ்டர் டேனியல் எட்வின், உலமா சபை சம்சுதீன், திராவிடர் விடுதலைக் கழகம் பால் பிரபாகரன், நரிக்குறவர் கூட்டமைப்பு மகேஸ்வரி, வியாபாரிகள் சங்கம் விநாயகமூர்த்தி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் பசும்பொன் பாண்டியன், மதிமுக நக்கீரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


Ahamed

Senior Journalist

Previous Post Next Post