தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து சத்துணவு சாப்பிட்டு அவர்களோடு இன்று (18.03.2022 கலந்துரையாடினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பசுவந்தனையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசு அனுமதி பெற்ற பின்பும் அகற்றப்படாமல் உள்ள தாய்சேய் விடுதி உட்பட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, துணை சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள், பசுவந்தனையில் உள்ள நியாய விலைக்கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இருப்ப குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் தெப்பக்குளத்தினை பார்வையிட்டு புனரமைப்பு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனயரிடம் கேட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் பசுவந்தனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து 100 நாள் வேலை திட்ட பதிவேடுகள், வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சிதம்பரம், பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம், சத்துணவு அமைப்பளார்கள் மீனா, தாமரைசெல்வி, சங்கரேஸ்வரி, சத்துணவு உதவியாளர் சிதம்பரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.