தூத்துக்குடி : மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்பாட்டம்.!


மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் N.A. கிதர் பிஸ்மி தலைமையில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே 1000 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக மேகதாது அணை ஒன்றைக் கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான செயல்பாடுகளை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்திருந்தது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தக்கோரி  அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

அந்த  அறிக்கையில்...

"தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. காவிரியின் குறுக்கே 1000 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக மேகதாது அணை ஒன்றைக் கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான செயல்பாடுகளை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்குள்ளாகும். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரைத் தரமறுக்கும் கர்நாடக அரசு இப்போது வந்துகொண்டிருக்கும் நீரையும் முடக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசின் மறைமுகத் துணையோடு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவிரி நதி மீதான எந்தவிதமானக் கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். ஆனால், தற்போது ஒன்றிய அரசு கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ் நாட்டு மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக வருகிற 15 -ந் தேதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .

தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்படும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தூத்துக்குடியில் இன்று காலை 10.00 மணியளவில்  BSNL அலுலகம் முன்பு, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் N.A. கிதர் பிஸ்மி தலைமையில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான  பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு பேச்சாளராக தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் O.A.நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் ரிச்சர்ட் தேவசகாயம் வரவேற்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு V.P.L. பாலா மாநில இளைஞர்அணி துணை செயலாளர், R.K. பாவேந்தர் தெற்கு மாவட்ட அமைப்பாளர், K. முகம்மது இப்ராகிம் மாவட்ட பொருளாளர், K. மீரான் மைதீன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், பொன்பாண்டி மாவட்ட இளைஞர்அணி தலைவர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞர்அணி செயலாளர், யோவான் நன்றியுரை ஆற்றினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post