நிலக்கோட்டை பேரூராட்சியில் முதல் பேரூராட்சி கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பேரூராட்சி தலைவர் திருமதி. சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் முதல் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சியின் துணைத் தலைவர் முருகேசன் மற்றும் செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 15 வார்டுகளிலும் உள்ள குறைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும் என்றும் கூறினார். திமுக  நிர்வாகியும் 3வது வார்டு கவுன்சிலருமான  ஜோசப் கோவில்பிள்ளை பேசும்போது நிலக்கோட்டை பேரூராட்சி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உடினடி தீர்வு காண வேண்டும் என்றும் திறந்த வெளி மலம் கழிப்பதை தடுத்து சுகாதாரமான பொதுக்கழிப்பறை மக்கள் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் எனவும் தூய்மையான  பேரூராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டார்.

இதில் 15 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் செயல் அலுவலர் சுந்தரி நன்றி கூறினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post