தூத்துக்குடி நகராட்சியாக இருந்த காலத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்தின் 92வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு
முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரும் மாநில ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளருமான பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, இளைஞர் காங்கிரஸ் ஜெயமணி சுரேஷ், மற்றும் தினேஷ், சண்முகம், முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.