தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டு.!


தூத்துக்குடியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தூத்துக்குடியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மினி மாரத்தான் ஓட்டம் இன்று (27.03.2022) நடைபெற்றது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மது அருந்துதல் மற்றும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டம் கோரம்பள்ளம், அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானம் முன்பிருந்து தொடங்கியது. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு. கண்ணபிரான்  துவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி நகர் முக்கிய சாலை,கடற்கரை சாலை வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சென்றடைந்தது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்மது தவிர் - மனிதம் வளர் என்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பேசியதாவது: மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று சிறப்பாக மாரத்தான் போட்டி நடைபெற்று முடிந்து இருக்கிறது. இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன். மாரத்தான் போட்டிகளில் பங்கு பெறுவது என்பது எளிதல்ல, பங்கு பெறுவது என்பதே சிறப்பானதாகும். பின் வரும் நாட்களில் இவற்றை நினைவு கூறும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும். 

இன்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டிகளின் நோக்கம் மது ஒழிப்பினையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். இதன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தினை உருவாக்குவதற்கு உதவ முடியும் என நம்புகிறேன். உங்கள் வாழ்க்கை நல்வழியில் மாறத்தான் இந்த மாரத்தான் - என தெரிவித்தார். 

நிகழ்ச்சிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உதவி ஆணையர் (ஆயம்) செல்வ நாயகம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவ. சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக்மாநில அதெலடிக் செயலாளர் பழனிச்சாமி, தூத்துக்குடி கோட்ட கலால் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post