திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! திண்டுக்கல் மேயர் "இளமதி" சிறுவன் வீட்டிற்கே சென்று வாழ்த்து!

திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும்,  கார்களின் சின்னங்கள்,  கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், பல்வேறு குர்ஆன் வசனங்கள், 


ஐந்து நிமிடங்கள் தலைகீழாக நிற்பது, ஒற்றைக் கையில் சைக்கிள் ஓட்டுதல், பல நிறங்களையும் பல்வேறு தலைப்புகளையும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், அரபி, ஆகிய நான்கு  மொழிகளில் கூறியும், இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 26.35 செகண்டில் கூறியும் மேலும் இது போன்ற கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தனது தனி திறன் கொண்டு அறிந்து ஒப்புவித்து உலக சாதனை படைத்து "கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


இதனை அறிந்த திண்டுக்கல் மேயர் திருமதி.இளமதி அவர்கள் திண்டுக்கல் மதார்பாவா தெருவில் வசித்துவரும் சிறுவன் முகம்மது இக்ராம் வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் எனது ஊரைச் சேர்ந்த சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று திண்டுக்கல்லுக்கு மாபெரும் பெருமையை தேடி தந்துள்ளார் எனக்கூறினார்.


சிறுவனின் தாய் நவ்ரின் தந்தை கிதர் முகமது இருவரையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டல் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் வழிகாட்டலின் படியும் திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சிக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்ஙி பாடுபடுவோம் என கூறினார்.

இது சம்பந்தமாக சிறுவன் முகம்மது இக்ராமின்  குடும்பத்தினர் கூறியதாவது; 

பிள்ளைகளை எப்படி வளர்த்தாலும் வளர்ந்து விடுவார்கள் அப்படி அல்லாமல் அவர்களின் திறமைகளை ஆற்றல்களை பெற்றோர் கண்டறிந்து அதன் பக்கம் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும்; மதிப்பிற்குரிய திண்டுக்கல் மேயர் திருமதி. இளமதி அவர்கள் வீட்டிற்கு வந்து பாராட்டுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளது சிறுவனின்  வளர்ச்சிக்கு மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

Previous Post Next Post