சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சேலத்தில் முதல் முறையாக 7 நிலை கருங்கல் ராஜகோபுரம் மற்றும் நூதன விமானங்கள் அமைத்து 164 ஹோம குண்டங்கள் அமைத்து உலகத்தில் முதல் முறையாக 6 கால யாக பூஜையுடன் 108 லட்சுமிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 03.04.2022 அன்று அதிகாலை முதல் தொடங்கி தீர்த்தக்குடம் புறப்பாடுடன் தொடங்கி முதல் யாகசாலை, 04.04.2022,05.04.2022, 06.04.2022 புதன் கிழமை 6 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் உலகத்தில் முதல் முறையாக 164 ஹோம குண்டங்களில் 200 வேத விற்பன்னர்களால் 6 கால யாக பூஜையுடன் மஹா கும்பாபிஷேக விழா ஒன்பதாம் படை வீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
காலை 7 மணிக்கு அண்ணக் கொடியேற்றி காலை 7 மணி முதல் இரவு 7 மணி இடைவிடாது அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றும்.இரவு 7 மணிக்கு தங்க ரதத்தில் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் திறளாக வந்து கலந்து கொண்டு ஸ்ரீ முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று செல்லுமாறு பக்தர்களுக்கு ஆசிரமத்தின் நிர்வாகி அருள்வாக்கு எஸ்.சோமசுந்தரம் செல்வி மற்றும் விழா குழுவினர் சார்பாக தகவல் தெரிவித்தனர்.