முடிச்சூரில் 8 மாணவ, மாணவியர்கள் ஒரு மணிநேரமாக தொடர்ந்து ஒரே வகையில் யோகாசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் சாய் யோகா அகடாமி சார்பில் தங்கள் மையத்தில் யோக பயின்று வரும் மாணவ, மாணவியர்களை
சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதது.
லக்ஷயா - யோக முத்ரா ஆசனம், லக்க்ஷித் - கூர்மாசனம், நிஷிதா - பத்ம புஜங்காசனம், சாய் நிகிலன்- நவாசனம், இந்திரேஷ் - உபவிஷ்ட கோனாசனம், வர்ஷினி பிரியா - பர்வதாசனம்,
மோனிஷ் கார்த்திக் -நத்தை ஆசனம், ஜெய் ஆதர்ஷ் -பரிவர்த்த பத்மாசனம் என 8 மாணவ மாணவியர்கள் 8 விதமான யோகாசனம் செய்தனர்.மேலும் 8 பேரும் ஒரே மேடையில் தொடர்ந்து ஒரே வகையான யோகாசனத்தை எந்த வித சிறு அசைவின்றி ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.
இதனை உலகசாதனையாக நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மாநில இயக்குநர் திலீபன் அங்கரித்தார். உலக சாதனையை நிகழ்வினை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நடுவர்கள் பசுபதி, நவின்ராஜ் ஆகியோர் மதிப்பாய்வு செய்தனர்.அதனை தொடர்ந்து சாதனை படைத்த 8 மாணவர்களுக்கு உலக சாதனை விருதினை முடிச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா, துணை தலைவர் விநாயகமூர்த்தி, கவுன்சிலர் விஜயாசங்கரன், மருத்துவர் டில்லி ராஜ், முடிச்சூர் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் ஆகியோர் வழங்கினர்.
அதேபோல் மாணவர்க்ளை சாதனையாளர்களாக உருவாக்கிய யோகா மாஸ்டர் ராஜா கோபாலுக்கும், யோக ரத்னா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுகணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.