கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சார்பில் 80 பேர் பங்ககேற்பு.!


ராமேஸ்வரம் மார்ச்., 12

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய சார்பில் பக்தர்கள் 80 பேர் பங்ககேற்பு ராமேஸ்வரம் மீன் பிடிதுறைமுகத்தில் இருந்து பக்தர்கள் இன்று புறப்பட்டனர். 

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கச்சத்தீவு புனித  அந்தோணியார் ஆலய திருவிழா  இரண்டு ஆண்டுகளாக நோய் தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்ளாத நிலையில் இன்றும் மற்றும் நாளையும் 

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து  80 பக்தர்கள் மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகில் கச்சத்தீவு புறப்பட்டனர்.

கச்சத்தீவு செல்லும் இந்திய பக்தர்களை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் வைத்து சுங்கத்துறை,காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முழுமையாக சோதனை செய்த பின் படகுகளில் செல்ல அனுமதித்தனர்.

மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பகதர்கள் இரண்டு தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின் பற்றி கச்சத்தீவு ஆலய திருவிழாவில்  கலந்து கொள்ள வேண்டும் என ராமநாதபுரம்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று இலங்கை யாழ்பாணம் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவில் பங்குதந்தை வசந்தம் தலைமையில் இலங்கை பக்தர்கள்  50 பேர் திருவிழாவில்  கலந்து கொள்கின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி பின் தேர் பவனி, பிராத்தனைகள் நடைபெறும். நாளை காலை இலங்கை இந்திய பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா  நிறைவடைகிறது.

இதற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளச் செல்லும் இலங்கை இந்திய மீனவர்களை ஒன்றினைத்து மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக திருவிழாவில் கலந்து கொள்ள செல்லும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி பாதுகாப்பு நலன் கருதி இன்றும், நாளையும் நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என ராமேஸ்வரம் மீன் வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,300க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post