தூத்துக்குடி வ உ சிதம்பரனார் துறைமுகத்தில் “பிரதமா் கதி சக்தி” திட்டத்தின் கீழ் வெளி துறைமுக விரிவாக்கத்திற்கு 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களான வெளி துறைமுக வளர்ச்சி திட்டம், கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டம், பல்நோக்கு சரக்கு பூங்கா வளர்ச்சி திட்டம், 5மில்லியன் லிட்டர் உப்பு நீரை நன்னீராக்கும் திட்டம், சரக்கு பெட்டகங்களை கண்காணிக்கும் வசதி, மின்னணு நகரும் இரயில் எடை நிலையம் ஆகியவையாகும்.
இதன் மூலம், வெளி துறைமுக விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு 18 மீட்டர் வரை ஆழம் கொண்ட கப்பல்களை கையாள முடியும்
18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டியூஸ் சரக்கு பெட்டகங்கள் கொள்ளளவுடைய பெரிய கப்பல்களை கையாள முடியும்.
தொடர் முயற்சியால் உருவாக்கப்பட்ட பிரதமரின் கதி சக்தி திட்டமானது அடுத்த தலைமுறையினருக்கான உள் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது தொழில்களையும் எளிதாக்குகிறது.
பாரத பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பொருளாதார மண்டலங்களும் ஒரே தளத்தின் கீழ் பல்முனை இணைப்பு கட்டமைப்புடன் இணைக்கப்படும்.
இத்திட்டமானது, பல்வேறு அமைச்சகத்தின் தனிப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த பொது திட்ட அலவுருக்களோடு ஆய்வு செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் பல்வேறு திட்டங்களுக்காக எடுக்கப்படும் முயற்சி அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும்.
பிரதமரின் கதி சக்தியானது இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த தடையற்ற பல்முனை போக்குவரத்து தொடர்புடைய ஒருங்கிணைப்பை உருவாக்கும். இந்த பல்முனை இணைப்பிற்கான பிரதமரின் கதி சக்தி திட்டமானது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வருவாய் இலக்கை அடைவதற்கான ஒரு மாபெரும் முயற்சியாகும்.
ரூபாய் 100 லட்சம் கோடி முதலீடு கொண்ட இந்த பெருந்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட 16 அமைச்சர்களின் கூட்டு அமைப்பின் மூலம் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையாக இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் சாலை முதல் இரயில் மற்றும் வான்வழி போக்குவரத்து முதல் விவசாய முறை பல்வேறு துறை அமைச்சகங்களும் இணைக்கப்படும்.
ஒவ்வொரு துறைக்கும் தேவைப்படும் துல்லியமான தகவல்களை குறித்த நேரத்தில் பெறும் வகையில் ஒரு தொழில்நுட்ப வலைதளமானது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றை சாளர இணையதளம் முகப்பின் மூலம் போக்குவரத்து செலவு குறைக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள 400 தரவு தகவல் அடுக்குகள் நடைமுறையில் ஏற்கனவே உள்ள மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களுக்கு தேவையான தகவல்களை மட்டுமல்லாமல் காடு நிலம் மற்றும் அதனால் கிடைக்கவுள்ள தொழிற்பேட்டைகளை பற்றியும் தகவல் அளிக்கிறது.
பிரதம மந்திரியின் தொடர் முயற்சியால் உருவாக்கப்பட்ட பிரதமரின் கதி சக்தி திட்டமானது அடுத்த தலைமுறையினருக்கான உள் கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது தொழிலையும் எளிதாக்குகிறது என கூறினார்.
பேட்டியின் போது சுங்கத்துறை கமிஷனர் தினேஷ் சக்கரவர்த்தி, துறைமுக ஆணைய துணை சேர்மன் பிமல்குமார், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், தென்னக ரயில்வே மதுரைக் கோட்டை வர்த்தக துணை மேலாளர் பிரசன்னா, இந்திய துறைமுக ரயில் கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ்பாபு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.