தூத்துக்குடியில் முதல்வர் பிறந்த நாள் விழா - 746 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!


தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினரும், 20 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி முன்னிலையில் 

திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு 746 பயனாளிகளுக்கு ரூ.6,17,500  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா,  மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன்,

மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமர், பாலகுருசாமி, மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, ரமேஷ், மருத்துவஅணி அமைப்பாளர் அருண்குமார், 

மகளிர் அணி அமைப்பாளர் ஜெபக்கனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், 

கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பொன்னப்பன், கந்தசாமி, ரிக்டா, ஜான்சிராணி, ஜெயசீலி, சரண்யா, ராமகிருஷ்ணன்,நாகேஸ்வரி,செபஸ்டின் சுதா, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் ஜாக்குலின்ஜெயா,  அன்னலட்சுமி,  விஜயகுமார், ஜெனிட்டா, கனகராஜ் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post