இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்வு.! : இந்தியா சாதனை.! - பிரதமர் மோடி தகவல்.!

இதுவரை இல்லாத அதிகபட்ச சரக்கு ஏற்றுமதி இலக்கான 400 பில்லியன் டாலர்களை (30 லட்சம் கோடி) இந்தியா எட்டியுள்ளது. உத்தேசித்துள்ள காலக்கெடுவை விட ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சரக்கு ஏற்றுமதி இலக்கை எட்டுவதில் நாட்டின் வெற்றியைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று புதன்கிழமை வலியுறுத்தினார்.

https://twitter.com/narendramodi/status/1506474220209184769?t=We0HMrR7YbwdSg9hEBbt4w&s=19

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் "இந்தியா 400 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது மற்றும் முதன்முறையாக இந்த இலக்கை எட்டியுள்ளது. இந்த வெற்றிக்காக எங்கள் விவசாயிகள், நெசவாளர்கள், MSMEகள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். இது நமது ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல். #localgoesglobal ” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

உத்தேசித்துள்ள காலக்கெடுவிற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா இதுவரை இல்லாத அதிகபட்ச ஏற்றுமதி இலக்கை எட்டியதைக் குறித்த கிராபிக்ஸ் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரியில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில், "தொடர்ச்சியாக 10 வது மாதமாக, ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரை, இந்தியா 30 பில்லியன் டாலர் ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. இது ஒரு சாதனை. நாங்கள் ஏற்கனவே 334 பில்லியன் டாலர் ஏற்றுமதியை கடந்துள்ளோம், இது 12 மாதங்களில் இந்தியா செய்த அதிகபட்ச ஏற்றுமதியை விட அதிகமாகும். 400 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டுவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்" என தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2021 டிசம்பரில், இந்தியா, 37 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டியது, இது ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு, முந்தைய ஆண்டு டிசம்பரில் இருந்து 37 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பரில், இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 37.29 பில்லியன் டாலராக இருந்தது, அதே சமயம் 12 மாதங்களுக்கு முந்தைய புள்ளிவிவரங்கள் 27.22 பில்லியன் டாலருக்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post