4வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வு : பெட்ரோல் லிட்டருக்கு ரூ.104.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.47-க்கும் விற்பனை.!

ஐந்து மாநில தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.102. 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து  ரூ.104.43-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  76 காசுகள் உயர்ந்து ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.3.03 ஆகவும் , டீசல் விலையில் ரூ.3.04 ஆகவும் அதிகரித்துள்ளது. 

இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.84 காசுகள் அதிகரித்து ரூ.113.35 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post