திருச்செந்தூரில் ரூ.3.95 கோடி மதிப்பீல் காய்கறி சந்தை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புதிதாக கட்டப்படவுள்ள ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் காய்கறி சந்தைக்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று  அடிக்கல் நாட்டினார்.

திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் புதிதாக தினசரி சந்தை அமைப்பதற்காக 3 கோடியை 95 லட்ச ரூபாய் மதிப்பில் 148 கடைகள் கட்ட படவுள்ளன இந்த பணிகளை  மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார் 

இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் உள்ள மைய நூலகத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார் 

மேலும் திருச்செந்தூர் வட்டாரப் பகுதிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புத்தாக்க பயிற்சி திருச்செந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இதிலும்  அமைச்சர் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்தார் தொடர்ந்து புத்தாக்க பயிற்சி கையேடுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் வழங்கினார்.

 நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் ரமேஷ், கோட்டாட்சியர் புஹாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

Previous Post Next Post