கயத்தாறு மற்றும் கழுகுமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.39 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.!


கோவில்பட்டி அருகே கயத்தாறு  மற்றும் கழுகுமலை ஊராட்சி ஒன்றியம் உள்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூபாய் 39 லட்சம் 40 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை முன்னாள்  அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் மற்றும் கழுகுமலை ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் நீதியில் இருந்து  பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்‌.


வடக்கு கோனார் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை  கூழையத்தேவன்பட்டி கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து 


ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான குடிநீர் பைப்லைன் மற்றும் துலுக்கர்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான மயானத்துக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வசதி மற்றும்  காளாம்பட்டியில்  

மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும்  சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான புதிதாக 


கட்டப்பட்ட நியாயவிலை கடை மற்றும்  ராமலிங்கபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூபாய் 3.40 லட்சம் மதிப்பிலான குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் 39. லட்சத்து 40 ஆயிரம்  மதிப்புள்ள திட்டப்பணிகளை

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, 

வானரமுட்டி கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரராஜ், கிளைச் செயலாளர்கள் இயேசு ராஜா,பெரியசாமி செல்வராஜ், சீனிவாசன், சுந்தர்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முருகன் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post