இந்தியாவில் உள்ள 35 குறைந்த காற்று மாசுபட்ட நகரங்களில், 31 தெற்கில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பட்டியலில் 14 நகரங்களுடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (9), கேரளா (4), மற்றும் ஆந்திரப் பிரதேசம் (3) என உள்ளன. இப்பட்டியலில் குறைந்த காற்று மாசு உள்ள நகரமாக அரியலூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக மோசமான மாசுபட்ட நகரங்களில் பெரும்பாலானவை வட மாநிலங்களில் அமைந்துள்ளன. அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மாசுபடுத்தும் தொழில்களின் பரவல் காரணமாக. "இங்குள்ள நகரங்கள் கடும் மாசடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் காற்று தர அறிக்கை 2021 இன் தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.