ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.