தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 32-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.வி. கவியரசன் வெற்றி பெற்றார். இன்று பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 32-வது வார்டில் உள்ள மக்களுக்கு கவியரசன் தலைமையில்
முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.