பொதுப்பணித்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் காலை திருப்பூர் குமரன் சிலை அருகே ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்.,ஐ.என்.டி.யு.சி.,எச்.எம்.எஸ்.,எம்.எல்.எப்.உள்ளிட்டதொழிற்சங்கத்தினர் சார்பில் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து.தடுப்புகள்.அமைத்து போலீசார் போராட்டக்காரர்களை தடுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர் இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.