தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
கடந்த 24.02.2022 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலதண்டாயுத நகர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் கண்ணன் (49) என்பவரை தாளமுத்துநகர் மெயின்ரோட்டில் உள்ள அவரது தையல் கடையில் வைத்து
முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகர் பகுதியை சேர்ந்தவர்களான தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (23) மற்றும் முத்துபாண்டி மகன் ரமேஷ் (எ) ரமேஷ் கண்ணன் (19) ஆகிய இருவரையும் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான ஜெயேந்திரன் மற்றும் ரமேஷ் (எ) ரமேஷ் கண்ணன் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் எதிரிகள் தாளமுத்துநகர், பாலதண்டாயுத நகர் பகுதியை சேர்ந்தவர்களான தமிழரசன் மகன் 1) ஜெயேந்திரன் மற்றும் முத்துபாண்டி மகன் 2) ரமேஷ் (எ) ரமேஷ் கண்ணன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.