28,29 ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில். பனியன் தொழிலாளர்களும் பங்கேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பனியன் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் சார்பில் 28, 29 ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அறிவித்துள்ளனர். மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச கூலி 21 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும், பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தனர்