ராமநாதபுரம் மாவட்டம் விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் 262 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவாயில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் இ.ஆ.ப.மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.வாணிபம் செய்வதற்காக இந்திய தேசம் வந்த ஆங்கிலேயர்கள் பின்னாலில் இந்திய தேசத்தை அடக்கி ஆட்சி செய்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடி இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களது பங்கு முக்கியமானது சிப்பாய்க்கலகம் நடைபெறுவதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் குறிப்பாக அன்றைய காலத்தில் இராமநாதபுரம் சீமையில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டவர் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ஆவார்.குழந்தைப் பருவத்திலேயே இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று கொண்டு எண்ணிலடங்காத பணிகளையும் தமிழ் வளர்ச்சி பணிகளையும் மேற்கொண்டார் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்ட வேண்டுமென்ற ஆணையினை துச்சமென நினைத்து கப்பம் கட்ட மருத்தவர் இவர் இராமநாதபுரம் சீமையில் அதிக அளவிலான கைத்தறி நேசவுகளை நிறுவி ஆங்கிலேயரிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளை தவிர்த்திட இந்திய மக்களை ஊக்கப்படுத்தினார்.மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களைகௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30ஆம் தேதியில் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.மா.காமாட்சிகணேசன் ராமநாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மன்னர் என்.குமரன் சேதுபதி மாவட்ட ஊராட்சி தலைவர் உதிசைவீரன் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கே.கார்மேகம் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வி.வேலுச்சாமி ராமநாதபுரம் நகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மாவட்ட கவுன்சிலர்கள் கே.கவிதா கதிரேசன் ரவிச்சந்திரன் ராமவன்னி பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது பட்டணம்தான் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மற்றும் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் வாரிசுதாரர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.