தூத்துக்குடி : மார்ச் 26ல் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் - கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தகவல்.!


தூத்துக்குடி சின்னகோவில் வளாகத்தில் நாளை மறுதினம் (மார்ச் 26ல்) சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கூறினார் 

தூத்துக்குடியில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் நேற்று அளித்த பேட்டியில்:- 

நாட்டில் 95% மேலுள்ள மக்கள் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என பல்வேறு மதங்களாக, பல்வேறு மொழிகள் பேசுபவர்க ளாக, பல்வேறு இனத்தவராக இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். இந்த ஒற்றுமையை, அமைதி சூழலை சிறு ஆதிக்க கும்பல் தகர்த்து வேற்றுமை பாராட்டுகிறது. வளர்ந்து வரும் இந்த பாசிச சக்திகளால் ஜனநாயக அமைப்பு கள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டு உள்ளன. 

இந்திய அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அளித்துள்ள உரி மைகளை பறித்து வழிபாடுகளுக்கும் இடையூறுகள் செய்யப்படுகின்றனர். மக்கள் என்ன உடுத்துவது, என்ன உட்கொள்வது எதைப் படிப்பது என சில சக்திகள் சம உரிமை அற்றவர்களாக மாற்ற முயற்சிக்கிறது. 

தமிழகத்தில் ஆதிக்கவாதிகள் சாதி சமய பூசல்களை வளர்த்து தங்கள் அரசியல் லாபத்துக்காக மக்களை பிரிக்கும் சூழ்ச்சிகளை செய்கின்றனர். இதனை கண்டித்தும் சமூக நல்லிணக்கத்தை பேணும் முயற்சியாக வருகிற 26ம் தேதி தூத்துக்குடி சின்னகோவில் வளாகத்தில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, என்றார்.

Previous Post Next Post