ஜூலை 24ஆம் தேதி குரூப் - 4 தேர்வு -நாளை முதல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


ஜூலை மாதம் 24ஆம் தேதி குரூப்-4 தேர்வு 3 மணி நேரம் நடைபெறும், தேர்வின் முடிவுகளை அக்டோபரில் வெளியிடத் திட்டம்.

274 கிராம நிர்வாக அலுவலர் பண்யிடங்களுக்கு தேர்வு நடைபெறும்; அக்டோபருக்குள் காலியாகும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர் என TNPSC தலைவர் பேட்டி! 

இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்,

ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுகளில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 7,382 காலி பணியிடங்களுக்குக்கான குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. 7,382 காலி பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும். 100 கேள்விகள் தமிழ் மொழி சார்ந்ததாக இருக்கும்; 75 கேள்விகள் பொது அறிவு சம்மந்தப்பட்டவை. 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள்தான் தரவரிசை பட்டியலில் இடம்பெறுவார்கள்.

மேலும் குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபருக்குள் காலியாகும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறினார்.

#TNPSC | #Exams
Previous Post Next Post