விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாதவியாதிகள் சிகிச்சை சிறப்பு பிரிவில், கால் நரம்பு பாதிப்பு அறியும் கருவி, கால் இரத்த ஓட்டத்தை அறியும் கருவி, இருதயவியல் பிரிவில் புதிய எக்கோ கருவி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து அமைச்சர் கூறியதாவது "தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவங்கப்பட்டு, படிப்படியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட் வருகிறது. அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோய் பாத வியாதிகள் சிகிச்சை சிறப்பு பிரிவில் ரூ.60,000 மதிப்பில் கால் நரம்பு பாதிப்பு அறியும் கருவியினையும், ரூ.70,000
மதிப்பில் கால் இரத்த ஓட்டத்தை அறியும் கருவியினையும், ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய எக்கோ கருவி என மொத்தம் ரூ.21.25 இலட்சம் மதிப்பிலான கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.