வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.




தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

*வேளாண் துறைக்கு மொத்தமாக 33,007 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*

*பசுந்தீவனங்களை உற்படுத்தி செய்ய நிதி ஒதுக்கீடு*

*  காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் சீரமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*  புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம்*

*  உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை*

*38 கிராமங்களில் 95 கோடி ரூபாய் மதிப்பில் சந்தைப்படுத்துதல் மையம்*

*பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தானியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கும்  திட்டம் ₹5 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

*வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு*

*நடமாடும் பழுது நீக்கும் மையம் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு*

*சிறு அளவிலான தொழில் உருவாக்கும் மையங்கள் அமைக்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு*

*தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும். அண்டை மாநில வணிகர்கள் இங்கு நேரடியாக கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்*

*அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ₹5 கோடி ஒதுக்கீடு*

*தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம்

*பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த 5 கோடி ரூபாய் சிறப்பு நிதி*

*  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்*

*  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்*

*பனை மரம் ஏறும் கருவிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு விருது வழங்கப்படும்*

*மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்*

*50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடியும், புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு*

*  தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ரூ. 27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்*

*தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ரூ. 8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்*

*உழவர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில், தனி இணைய முகப்பு உருவாக்கப்படும்*

*காய்கறி உற்பத்தியை அதிகரிக்க  5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்கள்*

*மலர் சாகுபடியை அதிகரிக்க 5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்*

*வேளாண் துறையிலும் மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்.*

*சொட்டு நீர் பாசன திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில் 960 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*2022-23-ம் ஆண்டில் 19 லட்சம் ஹெக்டேரில் ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்*

*ஊரக வளர்ச்சி துறை மூலம் பண்ணைக் குட்டைகள் அமைக்க, தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு 1245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு*

*சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ. 15 கோடியில் செயல்படுத்தப்படும்*

*கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 195 ரூபாய் வழங்கப்படும*

*விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு 5157 கோடி ரூபாய் வழங்கப்படும்.*

*சிறுதானிய திருவிழா மாநில மற்றும் மாவட்ட அளிவில் நடத்தப்படும்.*

*எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் நிதி*

*381 கோடி ரூபாயில் 3 உணவு பூங்கா*

*மண் வளத்தை அறிந்த கொள்ள தமிழ் மண் வளம் இணைய முகப்பு தொடங்கப்படும்*

*12 கோடி ரூபாயில் மரம் வளர்ப்பு திட்டம்*

*எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*ஆடு,மாடு, கோழி உளளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*2500 இளைஞர்களுக்கு விவசாய திறன் பயிற்சி*

*துவரை சாகுபடி சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்*

*சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்த இரண்டு சிறப்பு மண்டலங்கள்

*வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.*

*இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி*

*நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட 10 கோடி*

*மானியத்தில் வேளாண் கருவி வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய, 154 கோடி ரூபாய் இடுபொருள் மனியம் வழங்கப்பட்டுள்ளத.*

*விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நிதி*

*பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.*

*மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு*

*2020-21-ம ்ஆண்டில் 9.26 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்படைந்துள்ளனர்.*

*2021-22-ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது. 4.86 ஆயிரம் ஏக்கர் முந்தைய ஆண்டை விட அதிகமாகும்.*

*குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனை*

*காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்*

*முதல் வேளாணை்மை பட்ஜெட்டின் 86 அறிவுப்புகளுக்கு 80-க்கு அரசாணை வெளியிடப்பட்டது.*

Previous Post Next Post