தூத்துக்குடியில் ஆப்ரேஷன் 2.0 - 26 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை.!


தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த 2 பெண்கள் உட்பட 7 பேர் கைது  - பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன்  அனைத்து  உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.


அதனடிப்படையில் இன்று காலை தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் போலீசார் அய்யனார்புரம் சோதனைசாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, 

அங்கு வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம், நெடிய விலை பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் 1) துளசி (40), கன்னியாகுமரி  இந்திராநகர், அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த ஜேசு எமர்சன் மகன் 2) மரிய அலெக்ஸ் பிரிட்டோ (22), 


கன்னியாகுமரி, மணலிக்கரை, சித்திரங்கோடு காலனி பகுதியை சேர்ந்த புண்ணிய தாஸ் மகன் 3) பாபு ஷாகுலின் (32), கேரளா மாநிலம், இடுக்கி, ராஜமுடி வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த ஞானாபஸ் மகன் 4) ஜெனிடர் (33), ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 24 கிலோ கஞ்சாவை கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கடத்தியது தெரியவந்தது.

இதே போன்று  தூத்துக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியிலுள்ள உப்பளம் அருகிலுள்ள முட்செடிகளின் மறைவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், 


அவர்கள் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், மேட்டுபட்டி பகுதியை சேர்ந்த நாகூர் அனிபா என்பவரது மனைவி 1) பாத்திமா (எ) லைலா (49), தாளமுத்துநகர் அலங்காரதட்டு பகுதியை சேர்ந்த ஜேசு கென்னடி என்பவரது மனைவி 2) மரிய சிந்தாதுரை பிரின்ஸி (49) மற்றும் மேற்படி பாத்திமா (எ) லைலா என்பவரது மகன் 3) அப்துல் ரஹீம் (19) ஆகியோர்  சட்டவிரோதமாக 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

உடனே தனிப்படையினர் துளசி,  மரிய அலெக்ஸ் பிரிட்டோ, பாபு ஷாகுலின், ஜெனிடர், பாத்திமா (எ) லைலா, மரிய சிந்தாதுரை பிரின்ஸி மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய  கார் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 


(Hyundai Verna Car TN 05 AX 0006 and Yamaha FS TN 57 M 9781) மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்து, அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Previous Post Next Post