தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 மேற்கொள்ளுமாறு, காவல்துறைக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
டி.ஜி.பி அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், ஏப்ரல் 27 வரை ஆபரேசன் கஞ்சா வேட்டை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறும், தொடர்ந்து விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலியை உடைக்க, கொள்முதல், விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யுமாறும் டிஜிபி கூறியிருந்தார். ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கூறியிருந்த அவர், பார்சல் மூலம் போதை மருந்துகள் விற்போரை, தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுவரை ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 வேட்டையின் 2 நாளில் இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டு 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது