ஏழை, எளியோருக்கு இனி ரிசர்வேசன் டென்சன் இல்லை..192 ரயில்களில் ரிசர்வேசன் இல்லாத சாதாரண பெட்டிகள்

192 ரயில்களில் மீண்டும் ரிசர்வேசன் இல்லாத சாதாரண பெட்டிகள் இணைப்பு தென்னக ரயில்வே அறிவிப்பு  கொரோனா வந்ததும் வந்தது, அனைவரது வாழ்க்கையிலும் பல விஷயங்களை திருப்பிப் போட்டு விட்டு போய் விட்டது. அதற்கும் நாம் பழகிப் போய் விட்டோம். இப்படி ஒரு முக்கியமான மாற்றமாக நம்மில் பலரை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது, பொது போக்குவரத்து தான். பொது போக்குவரத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தான் நடுத்தர மக்களையும், ஏழை எளிய மக்களையும் பெரும் பாதிப்புக்கு ஆளாக்கின. அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் ரயில்வேயில் ரிசர்வேசன் செய்தால் தான் போய் வர முடியும் என்ற கட்டுப்பாடு, பலரது அவசர பயணத்துக்கு  தடை போட்டது. வெவ்வேறு ஊர்களுக்கு சென்று விட்டு, உடனுக்குடன் ரிசர்வேசன் செய்ய முடியாமல் அதிக காசு கொடுத்து பஸ் மற்றும் தனி வாகனங்களில் சென்று வர வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. இதனால் பயணிகளுக்கு பெரும் செலவு ஏற்ப்பட்டது. நேர விரயமும் ஏற்ப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா குறையத் தொடங்கியதை அடுத்து ரயில்வே நிர்வாகம் ரிசர்வேசன் செய்யப்படாத சாதாரண டிக்கெட் கொண்ட பெட்டிகளை இணைத்து செயல்படுத்தவும், சாதாரண டிக்கெட்டுகளை அதிகளவில் வழங்கிடவும் முடிவெடுத்துள்ளது. அதன்படி, தென்னக ரயில்வேயில் மட்டும் 192 ரயில்களில் ரிசர்வேசன் இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை கோட்டத்தில் 62 ரயில்கள், திருச்சி கோட்டத்தில் 18 ரயில்கள், மதுரை கோட்டத்தில் 23 ரயில்கள், சேலம் கோட்டத்தில் 15 ரயில்கள், பாலக்காடு கோட்டத்தில் 33 ரயில்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 41 ரயில்கள் என 192 ரயில்களில் முன்பதிவில்லாமல் டிக்கெட் பெற்று செல்லக்கூடிய சாதாரண பெட்டிகள் இணைக்கப்படுகிறது.   இந்த ரயில்களில் ரிசர்வேசன் இல்லா பெட்டிகளாக மாற்றப்பட்டு உள்ள பெட்டிகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு முழு டிக்கெட் பணமும் கேன்சலேசனில் திரும்ப அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வருகிற 10-ம் தேதி முதல் படிப்படியாக அடுத்த மாதத்திற்குள்ளாகவே  இந்த ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுகிறது என தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   எந்தெந்த ரயில்களில் எந்த தேதி முதல் சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம் லிங்க்: சாதாண ரயில் பெட்டி
Previous Post Next Post