அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா நடவடிக்கை.!

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ரஷியா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.  

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post