சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாச்சியாபுரத்தில் வசிப்பவர் பூமிநாதன்இவர் நேற்று இரவு கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுள்ளார்.இதை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரலில் வீட்டை உடைத்து பீரோவில் உள்ள 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் கொள்ளையடித்த அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த பத்திரங்கள் , துணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.இதேபோல் அருகிலுள்ள மற்றொரு வீட்டையும் உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.