தூத்துக்குடி : பேரீச்சம்பழ கண்டெய்னரில் மறைத்து சிகரெட்டுகள் கடத்தல் - சுமார் 1.20 கோடி மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்.!

File photo
துபாய் நாட்டின் ஜபல் அலி துறைமுகத்தில் இருந்து பேரீச்சம்பழம் என இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் 1.32 மதிப்புள்ள பண்டல்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரை சேர்ந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு  துபாயில் இருந்து கண்டெய்னரில் சிகரெட் பண்டல்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து துபாய் ஜபல் அலி துறைமுகத்தில் இருந்து கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த பேரீச்சம்பழ கண்டெய்னர்களை ஆய்வு செய்தனர். 

இந்நிலையில் மீன்வள கல்லூரி அருகே உள்ள தனியார் கண்டெய்னர் இறங்குதளத்தில் பேரீச்சம் பழம் என  கொண்டுவரப்பட்ட கண்டெய்னர் மீது சந்தேகமடைந்து, அதனை திறந்த அதிகாரிகள், கண்டெய்னரின் முன் பகுதியில் இரண்டு அடுக்குகளில் மட்டும் பேரீச்சம்பழ பெட்டிகளும், அதன் பின் பகுதியில் "குடாங் கரம், மற்றும் Essy Lite ', என்ற இந்தோனேசிய மற்றும் தாய்லாந்து நாட்டு சிகெரட் பண்டல்கள் இருந்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 1.20 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இறக்குமதியாளரை தேடி அவரின் முகவரிக்கு விரைந்துள்ள அதிகாரிகள் சுங்க முகவரிடமும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில் "சிகரெட் இறக்குமதிக்கு தடையில்லை, என்றாலும், அதற்கு வதிக்கப்படும் வரி சுமார் 160 % வரை இருப்பதாலும் ,லேபில் ரூல்ஸ் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாலும் இவ்வாறு மறைத்து கடத்தி வரப்படுவதாக தெரிவித்தனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள சிகரெட்டுகளை கண்டெய்னரில் மறைத்து கடத்தி வரப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post