காவலர்கள், தீயணைப்பு காவலர்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் உள்ளிட்ட துறைகளில் 11150 காவலர்களுக்கு பணிநியமன ஆணை.! - முதலமைச்சர் மு.கஸ்டாலின் வழங்கினார்.!


9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 11150 பேருக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.3.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர்  தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்  தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 9831 இரண்டாம் நிலை காவலர்களில், 6140 நபர்கள் சிறப்பு காவல் படையிலும், 3691 நபர்கள் ஆயுதப்படையிலும் தேர்வாகியுள்ளனர். இதில் 2948 பெண் காவலர்கள் மற்றும் 3 திருநங்கைகள் ஆகியோரும் அடங்குவர். மேலும், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வாகியுள்ளவர்களில் 12 பெண் சிறைக்காவலர்களும் அடங்குவர். காவல்துறையின் காலிப் பணியிடங்கள் நிரப்படுவதால், துறையின் புலனாய்வுத் திறன் மற்றும் செயல்திறன் மேலும் சிறப்பாக மேம்படும்.

இந்த நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர்  இரகுபதி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  எஸ்.கே. பிரபாகர்,  காவல்துறை தலைமை இயக்குநர்  சைலேந்திர பாபு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை  இயக்குநர்  பிராஜ் கிஷோர் ரவி, காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post