தூத்துக்குடி : தொலைந்துபோன 100 செல்போன்கள் மீட்பு.! - உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை 

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்



சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ ( IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து ஏற்கனவே 

கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும், 09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும், 02.07.2021 அன்று 60 செல்போன்களும் 24.08.2021 அன்று 70 மற்றும் 08.12.2021 அன்று 100 செல்போன்களும் மொத்தம் 453 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு இதுவரை சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 16 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்தனர் 

அவற்றை இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  ஒப்படைத்தார்.


தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இந்த செல்போனை பயன்படுத்தும்போது பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் மிகவும் கவனமாக கையாளவேண்டும், செல்போனில் நல்ல நிகழ்வுகளும் வருகிறது, 

கெட்ட நிகழ்வுகளும் வருகிறது, சிறுவர், சிறுமியர்கள் ஆன் லைன் வகுப்பிற்கு செல்போன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அந்த நேரத்தில் பெற்றோர்கள் அவர்கள் என்னென்ன விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும், 


செல்போன் படிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், மற்ற நேரங்களில் அதை பொதுவான இடத்தில் வைக்கும்படி செய்யவேண்டும், அவர்களுடைய வாழ்க்கைக்கு தேவையில்லாதவற்றையோ, 

வேறு பிரச்சனைகள் வரக்கூடியதை தவிர்க்க வேண்டும் என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

மேலும் காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த  சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  இளங்கோவன் தலைமையிலான போலீசாரை பாராட்டினார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு வகையான 10 திருட்டு வழக்குகளில் நூதனமான முறையில் திருடிய 12 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 91,000/- மதிப்புள்ள 3 ½ பவுன் தங்க நகைகள், 

ரூபாய் 3,60,000/- மதிப்புள்ள 4 இரு சக்கர வாகனங்கள், ரூபாய் 18,000/- மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூபாய் 30,000/- மதிப்புள்ள 2 ஆடுகள், ரூபாய் 20,000/- மதிப்புள்ள மீன்பிடி வலை மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் ரூபாய் 20,560/- மொத்தம் ரூபாய் 5,39,560/- மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Previous Post Next Post