தூத்துக்குடி பூ மார்கெட், டூவிபுரம் 10-வது தெரு சாலையை சரி செய்ய மாநகராட்சி ஆணையரிடம் அமமுக மனு.!


தூத்துக்குடி பூ மார்கெட் பகுதி, டூவிபுரம் 10-வது தெரு ஆகிய இடங்களில் சாலைகளை சரி செய்யக்கோரி அமமுக 30 வட்ட செயலாளர் காசிலிங்கம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் அவர் அளித்துள்ள மனுவில்..


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் உள்ள பூ மார்கெட் பகுதியில் சாலை சரியில்லாததால் பொது மக்கள் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார்கள். அந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை அரசை வலியுறுத்திவந்தேன். அதுமட்டும் அல்லாமல் பல போராட்டங்களையும் செய்து உள்ளேன். ஆனால் இதுநாள் வரையிலும் பூ மார்கெட் சாலை சரி செய்யவில்லை. தாங்கள் உடனடியாக ஆய்வு செய்து அந்த சாலையை சரி செய்ய வேண்டும்.

மேலும் 25.10.2021 அன்று மாவட்ட ஆட்சியரிடம் டூவிபுரம் 10-வது தெருவில் உள்ள மக்கள் D.No.69A to 69G,F-ல் வசிக்கும் மக்கள் ரோடு வசதி இல்லாமல் பரிதவிக்கிறார்கள் என்று மனு அளித்து இருந்தேன். ஆனால் அந்த சாலையும் சரி செய்யவில்லை. தாங்கள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து டூவிபுரம் 10-வது தெருவில் வசிக்கும் பொது மக்களுக்கு உடனடியாக சாலை வசதி செய்து கொடுக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post