உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் அமெரிக்காதான் – ரஷ்யாவில் உள்ள சீன தூதகரம் கருத்து.!


’உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல்’ அமெரிக்கா தான் என ரஷ்யாவில் அமைந்திருக்கும் சீன தூதரகம் .

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் ஜாவோவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.


லிஜியன் ஜாவோ பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ”உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் யார் என்பதை மறந்துவிடாதீர்கள்” என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், உலக ஜனநாயக சுற்றுப்பயணம் என குறிப்பிடப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா குண்டுவீசிய அல்லது படையெடுத்த நாடுகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

https://twitter.com/ChineseEmbinRus/status/1497321464126746626?t=jcgvb-gzfzEtJSsRgl8ccg&s=19

சீன தூதரகம் வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “1945-2001 வரையிலான காலகட்டத்தில், உலகின் 153 பிரதேசங்களில் நடைபெற்ற 248 ஆயுத மோதல்களில், 201 மோதல்கள் அமெரிக்காவால் தொடங்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில், சுமார் 81 விழுக்காடு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு பதிவில், “உக்ரைனை சுற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையில் குற்றவாளியான அமெரிக்காவின் பங்கு என்ன என்பது தான் முக்கியமான கேள்வி.

யாரும் தீயை அணைக்க முன்வரவில்லை என மற்றவர்களை குற்றம்சாட்டும் அதே வேளையில், தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையும் அமெரிக்கா செய்து கொண்டு இருக்கிறது. இந்த செயல் பொறுப்பற்றது மற்றும் வெட்கக்கேடானது” என சீன தூதரகம் பதிவிட்டுள்ளது.

Previous Post Next Post