நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இன்று காலை முதல் வாக்கு பதிவு துவங்கியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 750 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. பதற்றத்தை தடுக்க 2620 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து பகுதிக்குட்பட்ட வாக்களர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டுக்குட்பட்ட கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திமுக மேயர் வேட்பாளராக கருதப்படும் திமுக பொதுக்குழு உறுப்பினரும் 20வது வார்டு திமுக வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, வாக்களித்தார்.
உடன் திமுக மின்வாரிய தொழிற்சங்க செயலாளர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிதிநி பிரபாகர், வட்டச்செயலாளர் நாராயணன், உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிமுக மேயர் வேட்பாளரும் 59வது வார்டு அதிமுக வேட்பாளரான எஸ்.பி.எஸ்.ராஜா வாக்கு அளித்தார்.
உடன் 33 வது வார்டு அதிமுக வேட்பாளராக R.L.ராஜா நிர்வாகிகள் சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் இருந்தனர்.