நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த பட்ஜெட்: கொ.மு.க., தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி பேட்டி

  கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் பெஸ்ட் ராமசாமி திருப்பூரில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இயற்கை உரம் மூலம் விவசாய முறை செய்து விவசாயத்தை பேணி காப்பது நமது கடமை என்பதை தனது பட்ஜெட் மூலம் தந்துள்ளார். 26000 கிமீட்டர் தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தும் திட்டமும், மேலும் அடுத்த நிதியாண்டில் 22 ஆயிரம் 2000 கிமீட்டர் தொலைவிற்கு உலகத்தரத்திற்கு ஈடாக சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் மிகச் சிறப்பாகும். 

நமது நாட்டின் நீண்டகால முன்னேற்றத்திற்கும், சாலைப் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். 400 வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் (2023) ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு 2 உருவாக்கப்படுவது சிறப்பான அறிவிப்பாகும். 

கோதாவரி - கிருஷ்ணா-காவேரி-பெண்ணாறு நதிகள் இணைப்புத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், திநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும்வகையில் ரூ44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தமைக்கு மிக்க நன்றி. சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டம் சிறப்பானது. 

சுயசார்பு திட்டத்தின்கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், சிறு நிருவனங்களுக்க கூடுதலாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது சிறப்பு. டிஜிட்டல் முறையிலான கற்பித்தலும், உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பு. டிஜிட்டல் பல்கலைகழகங்கள் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

மேலும் 200 கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நுடப்பாண்டில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்றும், அனைத்து கிராமங்களுக்கம் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அறிவித்தது சிறப்பானது. மொத்தத்தில், மத்திய அரசின் 2022-2023 ஆண்டிற்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத்துறை, 5 ஜி சேலை, 60லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. 

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களுக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்று பெஸ்ட் ராமசாமி கூறினார். 
Previous Post Next Post