தாளவாடி,மார்ச்.01:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள குன்னன்புரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதி, அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்து தராத பள்ளி நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மரத்தடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அவர்களின் பெற்றோர்களும் அங்கு வருகை தந்துள்ளனர்.
தாளவாடி அருகே உள்ள குண்ணன்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தாளவாடி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகமாக பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் அடிப்படை வசதிகள், கழிப்பிட வசதிகள் இல்லை என அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும்,வகுப்பறை கட்டிடங்களும் குறைவாக உள்ளதாகவும், அதனை சரிசெய்து செய்யக் கோரி பலமுறை மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனை அடுத்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பறையில் புறக்கணித்து மரத்தின் அடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களின் பெற்றோர்களும் அங்கு வருகை தந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதன்பிறகு இரண்டு நாட்களில் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு காண்பதாக காவல்துறையினர் கூறினர்.இதனையடுத்து மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.